in

சவுதியின் வான்வழி உள்ளிட்ட அனைத்து பாதைகளும் மீண்டும் மூடப்பட்டது:

7
7

சவுதியின் வான்வழி,கடல்வழி மற்றும் சாலைகள் வழியாக அனைத்து பாதைகளும் மீண்டும் ஒருவார காலத்திற்கு இன்று(21/12/20) திங்கள்க்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிவிப்பு இன்று அதிகாலையில் திடிரென சவுதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கோவிட்-19 யின் இரண்டாம் கட்ட பீதி நிலவும் சூழலில் இந்த அதிரடி முடிவு என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து விமானங்களின் இரு வழி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது மற்றும் கப்பல், சாலைகள் வழியான சவுதியில் நுழையவும் முடியாது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் எந்தவொரு வழியாகவும் சவுதிக்குள், ஒரு வாரகாலம் யாரும் நுழையவோ…. வெளியேறவோ….முடியாது.

மேலும் இந்த தற்காலிக தடை, மேலும் இன்னொரு வாரத்திற்கு நீட்டிக்கவும் வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவு ஒரு வாரத்திற்கு பிறகு தெரியவரும்.

Source : Risalath TV – FM

6

கத்தார் வருகைக்கான தனிமைப்படுத்தப்பட்ட தேவைகள் February 15 வரை நீடிப்பு

9

கட்டண தனிமைப்படுத்தலுடன் கொழும்புக்கு திருப்பி அனுப்பும் விமானம் ஆரம்பம்