எட்டு மாதங்களின் பின்னர் தாய்வானில் இன்று (டிசம்பர் 22) உள்ளூர் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சர் சென் ஷிஹ்-சுங் ஒரு செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.
முன்னதாக கொவிட்-19 க்கு நேர்மறையை பரிசோதித்த நபர் ஒருவரின் நண்பர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
தாய்வானில் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி உள்ளூர் கொரோனா தொற்றாளர்கள் பதிவுசெய்யப்பட்டிருந்ததாக நோய் கட்டுப்பாட்டு மையங்கள் (சி.டி.சி) தெரிவித்திருந்தன.
அதன் பின்னர் உள்ளூரில் பதிவாகும் முதல் கொரோனா நோயாளர் இவர் ஆவார்.
இதேவேளை இன்றைய தினம் ஏனைய நாடுகளிலிருந்து தாய்லாந்து சென்றிருந்த மேலும மூவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுளுளது.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, தாய்வால் 770 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் ஏழு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில், தாய்வானில் இருந்து வருபவர்களுக்கான எல்லை கட்டுப்பாடுகளை டிசம்பர் 18 முதல் நீக்குவதாக சிங்கப்பூர் முன்னதாக கூறியிருந்தமையும் குறிப்பிடத்கத்கது.