இலங்கையில் அனைத்து 09 மாகாணங்களின் எல்லைகளையும் பயணக் கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்துமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் (பி.எச்.ஐ) அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெய்லி மிரர் பத்திரிகை அறிக்கையின் படி, கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தற்போது இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அதன் விளைவுகள் ஜனவரி மாதத்தில் எதிர்கொள்ளப்படும் என்று சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.
வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பல்வேறு பகுதிகளில் பெரிய அளவிலான கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறிக்கைகள் தங்களுக்கு கிடைத்ததாக சுகாதார பரிசோதகர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.