நாளை காலை 02.00 மணி முதல் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்கள் இலங்கைக்குள் தரையிறங்க அனுமதிக்கப்படாது என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் COVID-19 இன் புதிய பரிணாமம் பரவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தனது விமான நிலையங்களை சுற்றுலா பயணிகளுக்காக சனிக்கிழமை (26) முதல் திறக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.