தென்னாபிரிக்கா நாட்டிலும் அண்மையில் புதிய வகையான கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஐந்து நாடுகள் தென்னாபிரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்தித்துள்ளன.
தற்போது SARS-COV-2 வைரஸின் மாறுபாடு 501.V2 என அழைக்கப்படும் புதிய வகை வைரஸ் பரவாமல் தடுக்க ஜேர்மனி, துருக்கி, இஸ்ரேல், சுவிட்சர்லாந்து மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தென்னாபிரிக்காவிலிருந்து வரும் விமான சேவைகளுக்கு தடையை அறிவித்துள்ளது.
குறித்த தடை பெரும்பாலான நாடுகளில் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
தடையை அறிவித்த முதல் நாடுகளில் ஜேர்மனியும் ஒன்றாகும். ” கொரோனா வைரஸ் பிறழ்வு காரணமாக ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான பயணங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரும்புகிறது” என அந்நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.