in

கொரோனா தடுப்பூசி “ஹலாலா, ஹராமா”

Image 28
Image 28

உலகளவில் மீடியாக்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய அம்சமாக, கொரோனா தடுப்பூசி ஹலாலா? ஹராமா? என இந்தினோசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் விவாதத்திற்கு வந்துள்ள விசயம் மேற்கிளம்பியுள்ளது. இந்த இருநாடுகளிலிருந்தும் எழுந்துள்ள இந்த புதிய விவாதம் ஊடகங்களின் பசிக்கு தீனி போட்டுள்ளது.

மனித உயிர்களைக் காப்பாற்றும் நடவடிக்கையின் போது, ஹராமும் ஹலாலாக மாறிவிடும் என இஸ்லாமிய சட்டங்கள் பரிந்துரைப்பதாக ஜோத்பூரில் அமைந்துள்ள மெளலானா ஆசாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், இஸ்லாமிய ஆய்வுகள் பேராசிரியருமான அக்தருல் வாஸே , பிபிசி இந்திக்கு அளித்த பேட்டியில், கூறினார்.

நமக்குத் தெரியும் இஸ்லாமிய பழமைவாதிகள் ஹலால் ஹராம் பிர்சினையை முன்வைத்து, உலகளாவிய மீடியாக்களின் பசிக்கு தீனி வழங்குவதை தொடங்கிவிடுவர்.

அதே நேரம் இலங்கை ஊடகங்கள் எப்படி செயற்படுகிறது என்பதை தோழரும் கார்ட்டூன் கலைஞருமான Awantha Artigalaஒரு கார்ட்டூனை வரைந்திருக்கிறார். உண்மையில் மிக முக்கியமான காட்சிப்படம் இது என்று சொல்வேன். இதை அனைவரும் பகிர்ந்து ஊடக இனவாதத்தை எதிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

”கொவிட் 19 தொடர்பான முடிவுகள் முறையான அறிவியல் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்று தலைமை பதவியில் இருக்கும் மகா நாயக்க தேரர் தன்னுடன் உடன்பட்டதாகவும் இது குறித்து விரைவில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவேன்” என்று மகாநாயக தேரர் சொன்னதாக பாக்கீர் மாக்கார் அறிவித்திருக்கிறார். இப்படி அவர் கூறியிருப்பின் ஒரு முக்கியமான விசயம் கவனத்திற்கு வருகிறது. தற்போதைய கொவிட் 19 தொடர்பான நடவடிக்கைகள் அறிவியல் அடிப்படையில் எடுக்கப்பட வில்லை என சந்தேகிக்க இடம் தருவதையே இது சுட்டிக்காட்டுகிறது.

அதுபோல் மற்றுமொரு செய்தி சொல்கிறது. “அடக்கம் செய்ய அனுமதி கோரும் விடயத்தை மனிதாபிமான ரீதியில் மீளாய்வு செய்யுமாறு நிபுணர்குழுவிற்கு அரசாங்கம் அறிவித்துள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண கூறியிருந்தார்.” ஒரு செய்தி அறிவியல்ரீதியில் அணுகும்படி சொல்கிறது. மற்றுமொரு செய்தி மனிதாபிமானரீதியில் அணுகும்படி சொல்கிறது.

ஆக, அறிவியல்ரீதியிலோ, மனிதாபிமான ரீதியிலோ கொவிட் 19 பற்றிய நடவடிக்கைகள் நடைபெறவில்லை என்பதை ஊகிக்க இந்தச் செய்திகள் இடம்தருகின்றன. எனவே, இவைகளுக்கு அப்பால் வேறு ஏதோ ஒன்று காரணமாக பின்னணியில் இருந்துகொண்டு கொரோனா நடவடிக்கைகளை வழிநடாத்துகின்றன என்பதை மேலோட்டமாக ஊகிக்கலாம்.

ஜனாஸா எரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்து எட்டு மாதங்களைக் கடந்த நிலையில், கிட்டத்தட்ட 100 ஜனாஸாக்கள் எரித்து முடிக்கப்பட்ட நிலையில், நாடுதழுவியரீதியில் அமைதிப்போராட்டங்களும்,எதிர்ப்புக்களும் உருவான பின்னர்தான் “ஜனாஸா எரிப்பு தொடர்பான” நடவடிக்கைகளை மீள் பரிசீலனை செய்ய அரசு அக்கறை கொள்கிறது எனில், தமது நாட்டு மக்களின் பிரச்சினைகளை கையாள்வதில் எவ்வளவு பொடுபோக்காக அரசு செயற்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். ஆக, இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் இன வெறுப்பு நிச்சயம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதில் யாருக்கும் சிக்கல் இருக்காது.

சரி இதன்பிறகாவது ஜனாஸா எரிப்பை நிறுத்துவதற்கு அரசு முடிவெடுத்தாலும், நிபுணர் குழு மாற்றீடான வழிமுறைகளை பரிந்துரைத்தாலும், மாறாத கேள்வி ஒன்று உள்ளது. நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் பிழையான அல்லது எரிப்பதற்கு மாற்றீடான பரிந்துரைகளை முன்வைக்காது எரிக்கப்பட்ட இந்த நாட்டின் குடிமக்களுக்கு என்ன நீதி காத்திருக்கிறது. நிபுணர் குழுவுக்கெதிரான சட்டரீதியான நடவடிக்கைகள் என்ன? எரிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்ன? மறுக்கப்பட்ட நீதியை முன்வைத்து, அதற்குக் காரணமான நிபுணர் குழு சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுமா?

ஜனாஸாக்களை எரிப்பதற்கு நிபுணர் குழு பரிந்துரைத்த காரணங்களை ஆதாரமாகக் கொண்டே, அரசு வர்த்மானியை வெளியிட்டதாகவும், அரசல்ல நிபுணர் குழுவே அனைத்துக்கும் பொறுப்பானது என பலமுறை அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆக, நாட்டில் பல குழப்பங்களுக்கும், குடிமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதத்திலும், நீதி மறுக்கப்படும் நிலைக்கு காரணமாகவும் அமைந்திருப்பது நிபுணர் குழுவின் செயற்பாடே என்பதால், அந்தக் குழுவை சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். இது சாத்தியமா? நீதி கிடைக்கிறதோ இல்லையோ சட்டத்தின் முன்பு நிபுணர்குழுவை நிறுத்தத்தானே வேண்டும்? அதுதானே இனிவருங்காலங்களில் இப்படியான நிபுணர் குழுக்களால் குடிமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌரியங்களைத் தடுக்க முடியும்?

Image 26

வெளிநாட்டில் உழைத்தவரின் இப்போதைய நிலைமை

Image 33

அல் கோர் பூங்காவிற்கான நுழைவுச் சீட்டை அல் மீரா கிளைகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.