காலை 8 மணிமுதல் இரவு 12 மணிவரை தொடர்ந்து கைகால், கண்ணிற்கு ஓய்வில்லாமல் உழைத்த ஒருவர் என்னிடம் பேசினார். சிறுவயது முதல் நல்ல சுறுசுறுப்புடன் பணிசெய்து வந்தேன். தற்போது என் வயது 57, எனக்கு கிட்னியில் பிரச்சனை உருவாகி தற்போது, யூராலஜி மருத்துவர்களை சந்தித்து மருத்துவம் செய்துவருகிறேன்.
அவர் கிட்னி சுருங்கிவிட்டது. அதனை நீக்கிட வேண்டும் என்கிறார். இனி நான் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பதாக கூறினார். ஒரு கிட்னியை எடுத்தால் இன்னொரு கிட்னியில் மனிதனால் வாழமுடிகிறதே.. என தனக்குள் ஆறுதல் சொல்லிக்கொண்டார்.
இறைவன் படைத்ததில் எதையும் காரணமின்றி படைக்கவில்லை. இரு கிட்னிக்கும் உடலில் வேலைகளை வைத்துள்ளான். ஒவ்வொரு கிட்னியிலும் பல லட்சக்கணக்கான மெல்லிய துவாரங்களை வைத்து இரத்ததில் சேர்ந்த கழிவுகளை நீக்கினால் மட்டுமே இரத்தம் பம்ப் செய்யப்பட்டு ஒரு ‘லட்ச கிலோமீட்டர்’ சிறுசிறு மெல்லிய இரத்த குழாய் வழியாக மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்து பயணமாக முடியும். என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
உடல் சேமிக்கும் ஆற்றலை குறிப்பிட்ட மணிநேரத்திற்குள் நாம் செலவுசெய்தபின் உடல் சோர்வு ஏற்படும். அந்த அசதியில் உடலுக்கான ஓய்வை கொடுத்தால், உடல் எந்த பாதிப்பின்றி தரமாக இருக்கும். அதிகஆற்றலை செலவு செய்து, ஆற்றல் தேவை எனக்கருதி கிடைத்ததை எல்லாம் சாப்பிட்டு, இரவை பகலாக மாற்றி, பகலில் ஓய்வின்றி வேலை செய்தோமானால், இரத்த நாளங்களில் உஷ்ணம் அதிகரித்து, சிதைவுகளை உருவாக்கும்.. அதனால் இராஜ உறுப்பின் மீதுள்ள இரத்த ஓட்டங்கள் தடைப்படும் அதனால் உறுப்பு உயிரோட்டமில்லாமல் திணறும். அப்படித்தான் ஆகிவிட்டது அவருக்கு.