சுமாா் 2.30 லட்சத்திற்கும் அதிகமானோரை உயிரிழக்கச் செய்த சுனாமி ஆழிப் பேரலையின் 16ம் ஆண்டு நினைவு தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவில், சுமத்ரா தீவு அருகே 2004ம் ஆண்டு டிசம்பா் 26ம் தேதி அதிகாலை சுமாா் 1 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பூமிக்கு கீழே நிலத்தட்டுகள் சாிந்தன. ஆய்வாளா்கள் 10 நிமிடங்கள் வரை இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தொிவித்தனா். உலகில் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவில் நிலநடுக்கம் பதிவானதில்லை என்று ஆய்வாளா்கள் தொிவித்தனா்.
ரிக்டா் அளவுகோலில் 9.1 முதல் 9.3 வரை நிலநடுக்கம் பதிவானது. இதனைத் தொடர்ந்து இலங்கையிலும் அதிகாலை 8.45 மணியளவில் கடலுக்கு அடியில் 7.3 ரிக்டா் அளவுகோலில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் சுமார் 31229 அப்பாவி ஜீவன்களை காவு கொண்டு பல கோடி பெறுமதியான மக்களின் சொத்து, உடமைகளை இழந்து நிற்க கதியில் உள்ளாக்கியது இதன் தாக்கம் இன்று வரை எம் நெஞ்சில் ஒருபோதும் அழியாச்சுடராக ஒலித்துக்கொண்டிருக்கின்றது.