கத்தாரின் பாதைகளில் உள்ள உரிய பாதசரிக் கடவைகளைப் பயன்படுத்தாமல் விரும்பிய இடங்களால் பாதைகளைக் கடக்கும் பாதசாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கத்தார் சிட்டிசன்கள் இது தொடர்பாக பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் படி அழைப்பு விடுத்துள்ளதாக கத்தார் செய்தி நாளிதழான அல் ராயா தெரிவித்துள்ளது.
சல்வா வீதி, செனயா வீதி, வடக்கு வீதி மற்றும் முக்கிய அதிவேக வீதிகளில் கூட பாதசாரிகள் ஒதுக்கப்பட்ட உரிய இடங்களால் கடக்காமல் வாகனங்களுக்கு முன்னால் ஆபத்தான முறையில் கடப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல பாதசாரிகள் பாதசாரி சுரங்கப்பாதைகள் இருந்தும், அதனைப் பயன்படுத்தாமல் பாதை வேலிகளுக்கு மேலால் ஏறிப் பாய்ந்து கடப்பதாக அல் ராயா புகைப்படக் கலைஞரொருவர் தெரிவித்துள்ளார்.