கீழ் குறிப்பிடப்பட்ட மகிமைகளுடைய மஞ்சளை தீயிட்டு அழிக்கும் அளவுக்கு திறமையான ஆட்சியாளர்களை கொண்ட நாடாக இலங்கை மாறியிருப்பது கவலைக்குரியது.
நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு.
இதனால் தான், இந்து கலாசாரத்தில் முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இது இயற்கையான நிறமியாக இருப்பதால், பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.
மஞ்சளின் மருத்துவ குணம்:
* வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.
* உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.
* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு.
* உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.
* மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.
* மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.